April 26, 2024

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க் எனும் நகரத்தில் கொரோனா தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யேர்மனியின் மத்தி வடமத்தியில் அமைந்துள்ள தமிழாலயங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மாவீரரின் தியாகங்களை மனதில் ஏந்தி கொரோனா விசக்கிருமியின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்தபடி கலந்துகொண்டு மிகச்சிறப்பாக போட்டி போட்டவண்ணம் உள்ளனர்.

இந் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்பு சிறிலங்கா அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலைச் சிறுவர்களுக்கான சுடர் வணக்கத்தினையும் மலர் வணக்கத்தினையும் போட்டியாளர்களும் பொறுப்பில் உள்ளவர்களும் பொதுமக்களும் செலுத்தினர். புpன்பு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக் கொடிகளுடன் தமிழ்க் கல்விக் கழகக் கொடியும் ஏற்றப்பட்டு வீர வீரங்கணைகளினால் ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.