Mai 8, 2024

யாழ் துர்க்கா மணிமண்டபத்தில் ஊசி போட வந்தவர்களுக்கு நடந்த அலங்கோலம்

காலை 7.00 மணிக்கெல்லாம் மக்கள் ஒன்று கூடத் தொடங்கி விட்டனர்.
நீண்டா வரிசை வளைந்து நெளிந்து போனது கொஞ்சம் குறுக்காக போவது கொஞ்சம் முன் அனுமதியுடன் ( இயலாதவர்கள்) சிலர் என 60 வயதிற்கும் க்கும் மேற்பட்ட மூத்தோர்களுக்கான ஊசியிடல் இன்று காலை துர்க்கா மணி மண்டபத்தில் ஆரம்பமானது.
அனைவரும் முதியோர்கள். அவர்களுள் முன்னாள் அரச தனியார் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்…..என பல்வேறு தொழிற்றுறை சார்ந்தோறும் சாதாரண மக்களுடன் இணைந்தே காத்திருந்தார்கள்.
4 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய சுகாதார பிரிவினருக்கு ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் கடந்த முறை ஊசி பெற்றுக் கொண்டனர் என்று தெரிந்திருக்கும்.
அதனை வைத்து ஒவ்வொரு GS பிரிவினரையும் நேரப் பிரிப்பு செய்திருக்கலாம். அல்லது நொய்த்தொற்று நெருக்கடி நிலை அடிப்படையில் அந்தந்த GS பிரிவில் ஒழுங்கு செய்திருக்கலாம்.
“”வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் உங்களுக்கெல்லாம் உள்ளே உள்ள நிலை தெரியாது “”என்கின்றார் இன்றைய இளம் பணியாளர் ஒருவர்.
சரியான முறைப்படி தங்கள் ஒழுங்கமைப்பை நிர்வகிக்க கடினப்படும் இவர்கள் முதியவர்கள் மீது குற்றம் சாட்டுபவர்களாகவும்; அவர்கள் அறிவில்லாத முட்டாள்கள் ; சொல்வது புரியாதவர்கள் ;காது கேட்காதவர்கள் என்றெல்லாம் பொறிஞ்சு கொட்டுகின்றனரே தவிர உடனடி தீர்மானம் எடுக்கக் கூடிய திறன் கூட ஏன் அவர்களிடம் இருக்கவில்லை. ????
சாதாரணமாக வரிசைக் கிரமத்தில் ஒழுங்கைப் பேணிய மக்களை ஒரு உத்தியோக இளைஞன் அடிக்கடி குழப்பிக் கொண்டே இருந்தார்.
வரிசை ஒழுங்கை குழப்பி A B C D அடையாளமிட்ட அட்டையாளர்களை மாறி மாறிக் கூப்பிட்டு முன் செல்ல அனுப்புகின்றார்.
அவர்கள் ஏற்கனவே வரிசையில் நிற்பவர்களை கடந்து செல்ல ……
அவர்களை நடுவில் நிறுத்தி விட்டு வேறு அடையாளம் கூப்பிடுகின்றார்.
பின் அந்த மக்களும் அல்லோலப்பட்டு வர …….
அவர்களையும் நடுவில் விட்டு விட்டு…….
மீண்டும் வேறு அடையாளத்துடன் அழைக்கின்றார். ……
இப்படியே மக்களை கூப்பிட்டு கூட்டமாக கும்மியடிக்க வைத்த உத்தியோக இளைஞன் மீண்டும் அவர்களை நோக்கி
“” உங்களுக்கு சொன்னால் விளங்காதா?
இதிலை ஏன் குவிஞ்சு நிக்கிறியள்? கூப்பிடும் போது வாங்கோவன் …”” என இன்னொரு ஏவலின் அடிப்படையில் அந்த மக்களை பார்த்து குரைக்கின்றார்.
அந்த சூழல் குழம்புகின்றது.
ஒழுங்கு முறைப்படி சென்ற மக்களை ஒழுங்கின் படி சேவை வழங்க தெரியாத இந்த பணியாளர் தன்னுடைய விசர்த் தனத்தை எப்படி அந்த முதியவர்கள் மீது பாச்சுகின்றார் என்பதை அவதானித்த நாம் அது குறித்து விளக்கம் கேட்கையில் “”பார்வையாளர் உங்களுக்கு அதெல்லாம் விளங்காது “”என தனது முட்டாள் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துச் சென்றார்.
ஆனால் தன்னுடைய செயலில் வீரியம் கொண்டார்.
எந்த கொத்தணி எத்தனை குட்டி போட்டால் தான் என்ன? என்று நல்லூர்த் திருவிழாவுக்கான கொண்டாட்ட ஆர்ப்பரிப்பும் அலங்காரமும் சுற்றாடலை நிறைக்கின்றது.
வயதானவர்கள் பாதுகாப்பாக ஊசி போடச் செல்லும் வகையில் மணி மண்டப வெளி வீதி இருக்கவில்லை.
அலங்கார வேலைகளால் நெருக்கடியில் அந்த சூழல். முதியவர்கள் தட்டுப் பட்டு கீழே விழும் வகையில் இரும்பு கேடர்களை பாதை வழியில் போட்டு வைத்துள்ளனர்.
பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் முயற்சியின் பின் வேறும் ஒருவர் அந்த இரும்பு கேடர்களை ஒதுக்க உதவினர்.
அதே நேரம் வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்து விட்டு ;
(05.07.2021 துர்க்கா மண்டபத்தில் ஊசி பெற்றவர்களுக்கு மட்டுமே இன்று போடப்படும் ஏனையவர்கள் திரும்பிச் செல்லவும் என்று அறிவிப்பும் செய்தனர்.
சிலர் களைச்சுப் போன நிலையில் திட்டியவாறு திரும்பிச் சென்றனர். இதனை ஏன் முன்பு அறிவிக்க முடியவில்லையா?
கொரோணாத் தொற்று குறித்து விழிப்புணர்வு செய்யும் வீரர்களே முதலில் அறிவுடன் அனுபவத்தையும் சேர்த்து பாவியுங்கள் .
உங்கள் ஒவ்வொருவரின் மனித நேயப் பணி முக்கியம் என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள். அப்போது தான் மக்களிடம் ஒத்துழைப்பு கோர முடியும்.
( யாழ்ப்பாணம்
கைதடி
சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளில் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் திட்டமிட்டு செயற்படுகின்றனர். அவற்றை தரிசித்து அடுத்து வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்துவது மதிப்பு மிக்கது.
உங்கள் திட்டமிடலே சமுதாயப்பணியில் உங்களுடன் நாமும் கைகோர்க்க வழிப்படுத்தும்.
நன்றி
யாழ்.தர்மினி பத்மநாதன்.