Mai 8, 2024

துயர் பகிர்தல் பேக்மன் ஜெயராஜ்

மறைந்தார் மகத்தான கலைஞர் பேக்மன் ஜெயராஜ்
1994களில் எனது முதலாவது நாட்டுக்கூத்து திருமறைக்கலாமன்றத்தில் அரங்கேற்றியபோது அவரை காண்கின்றேன். எங்களுக்கு வேட உடைகள், ஒப்பனை தெரிவுகளில் உதவியாக இருந்தார். நாங்கள் குருமாணவர்களாக படிக்கிறகாலத்தில் அவருடைய வீடும் எமது குருமடத்த்திற்கு ஒரளவு அருகாமையிலிருந்தபடியால் குடும்பத்றை தெரிகிற அளவுக்கு அறிமுகம் இருந்தது.
என்னை சிலிர்க்க வைத்த அவரது கணீரென்ற காந்தக்குரல்….
யாழ்ப்பாணத்தில் குருமட மாணவர்களாக படிக்கும் காலத்தில் (1993 களிலிருந்து) தென்மோடி நாட்டுக்கூத்துக்கள் ஊர்களில் பெரிய ஒலிபெருக்கிகளின் உதவியோடு அரங்கேற்றுவார்கள். அந்த நாட்டுக்கூத்துக்களை நீண்ட தூரத்திலிருந்து கேட்கக்கூடியாக இருக்கும்.
அப்படி அவரது சில நாட்டுக்கூத்துக்களை தூரத்திலிருந்து கேட்டு ‘சே.. என்ன குரல் இந்த மனுசனுக்கு’ என்று நான் வியந்து சிலிர்த்த சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. மிக உச்சஸ்தாயியிலே சிறிதும் சுருதி பிசகாமல் மிக இலாவகமாக பாடுகின்ற அவருடைய தனித்துவம் மிகவும் பாராட்டுதற்குரியது.
ஓர் கலைஞராக வாழ்ந்து மறைந்த பேக்மன் ஜெயராஜ் அண்ணனுக்கு என் கலைத்துவ அக வணக்கம்
2