Mai 3, 2024

பிரித்தானியாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உயர் அங்கீகாரம்

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன் என்ற பிரித்தானிய பயோகெமிஸ்டும் இந்த பரிசை கூட்டாக பெறுகிறார்.

Solexa-Illumina Next Generation DNA Sequencing (NGS), என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான இந்த பரிசு இருவருக்கும் வழங்கப்படுகிறது.

ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான டிஎன்ஏ மரபுவரிசை உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் மிகச்சரியாகவும் அதே நேரம் பெரும் எண்ணிக்கையிலும் கண்டுபிடிக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.

கோவிட்  வைரசுடன் மக்கள் போராடி வரும் இந்த இக்கட்டான தருணத்தில் தமிழரான சங்கர் சுப்பிரமணியனின் இந்த கண்டுபிடிப்பு அந்த கொடிய வைரஸை ஒழிக்க உதவும் என நம்பப்படுக்கிறது.