Mai 2, 2024

வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுத்துள்ளனர். www.tamilnews1.comமுள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலை சூழலில் இராணுவத்தினர் , பொலிஸார் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு காண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. www.tamilnews1.com

இந்நிலையில் தடைகள் கண்காணிப்புக்களை மீறி பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். www.tamilnews1.com

அதனை அடுத்து யாழ்.பல்கலைக்கழக காவலாளிகள் இருவரை கோப்பாய் பொலிஸார் வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். www.tamilnews1.com

பின்னர் பல்கலை நிர்வாகம் ஊடாக இன்றைய தினம் கடமையில் இருந்த மேலும் மூவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.

பொலிஸ் நிலையத்தில் காவலாளிகள் ஐந்து பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களை இரவு விடுவித்தனர். www.tamilnews1.com