Mai 9, 2024

செவ்வாய் கோளில் ஒக்சிசன் தயாரிப்பு! புதிய வரலாறு படைத்தது நாசா!

M2020 ATLO - MOXIE InstallationRequesters: David GruelPhotographer: R. LannomDate: 20-MAR-19Photolab order: 070915-171696

பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க விட்டது என்ற வரிசையில், தற்போது செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை தயாரித்துள்ளது. கார் பேட்டரி அளவுள்ள மாக்சி எனப்படும் தங்கப்பெட்டியில் உள்ள கருவிகள் மூலம், ஒரு விண்வெளி வீரர் 10 நிமிடங்கள் சுவாசிக்க தேவையான அளவான, 5 கிராம் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு டன் அளவுள்ள இதே கருவியை செவ்வாய்க்கு அனுப்பினால் அதன் மூலம் 25 டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என்பதால், இந்த சோதனை முயற்சியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.