மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  மாஸ்டர் திரைப்படம்  வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக படம் வெளியிடப்படவில்லை.

இதனிடையே படம் ஓடிடியில் வெளியாகும் என சில தகவல்கள் பரவி வந்த நிலையில் நேற்று படக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2021 ஜனவரி 13 ஆம் திகதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.