சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது!

 இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். கடந்த மார்ச் மாதத்தில் சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, பொது முடக்கம் நீடித்தால் ரூ.50 ஆயிரம் வரை உயரும் என கூறப்பட்டது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.4,821க்கு விற்பனையாகிறது. அதன் படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.68.40க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.68,400க்கும் விற்பனையாகிறது.