பிரான்ஸ் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு சம்பந்தமான அறிவிப்பு!

 

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. எம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற குடியிருக்கும் மாவீரர்களை நினைந்துருகி வீரவணக்கம் செலுத்தும் நாளே இத்தேசிய மாவீரர்நாள். 2020 இல் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் 19 இனால் பிரான்சு தேசத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் சுகாதார சுயபாதுகாப்புக் காரணமாகக் கடந்த காலங்கள் போன்று இந்த ஆண்டு நாம் ஒன்றாகச் சேர்ந்து தேசிய மாவீரர் நாளை நடாத்த முடியாது போயிருந்தாலும்  மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை எமது இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் நவம்பர் 27 ஆம் நாள் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்த வேண்டியது அனைத்துத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

அந்தவகையில் பிரான்சு தேசத்தின் தற்போதைய சூழலுக்கு அமைவாக ஒளியேற்றி வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக எல்லோருக்கும் பொதுவானதொரு திருவுருவப்படத்தைத் தயார்செய்துள்ளோம். இப்படத்தினைப் பெற்றுக்கொண்டு நவம்பர் 27 ஆம் நாள் சரியாக 13.37 மணிக்கு ( தாயகநேரம் 06.07) மணிக்கு இல்லங்களிலும், பணியிடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், வணக்கத்தலங்களிலும் இத்திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒளியேற்றி அந்தப் புனிதர்களை மகிமைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

எல்லோருக்கும் பொதுவான இத்திருவுருவப் படத்தை பின்வரும் இணையத்தளத்தில் (errimalai.com) நேரடியாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தேசியச் செயற்பாட்டாளர்கள் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு : மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் உரித்தானவரின் மாவீரர் படத்துடன் இப்பொதுப்படத்தையும் சேர்த்து ஒளியேற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். முடிந்தவரை நிழற்படம் எடுத்து மின்னஞ்சல் (E.mail), வட்சப்(Whats App),வைபர் (Viber) மூலம் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். மின்னஞ்சல் : francecctf@gmail.com

மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  – மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு

தொலைபேசி: 01 43 15 04 21  –   07 51 46 0785   –  06 00 00 0000