கோத்தா ஆட்சி:தமிழ் மீண்டும் குப்பைக்கூடையினுள்?

மீண்டும் தெற்கில் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் இனவாத அரசியல் போக்கு முனைப்படைந்து வருகின்றது.

2019 ஆகஸ்ட் மாதத்தில் உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே வெளியிடப்பட்டு தமிழ் மாணவர்கள் புறம் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் தமிழ் உபவேந்தர்கள் ஆணைக்குழுவின் தமிழ் மாணவர்களை ஒதுக்கும் போக்குக்கும் ஆட்சிமொழியான தமிழுக்கு இழைக்கப்படும் சட்டவிரோத செயல்பாட்டையும் இனியாவது ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தகைய அமைப்பில் முன்னாள் யாழ்.பல்லைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டவர்கள் இருந்துவருகின்ற போதும் அவர்கள் கண்டுகொள்ளாதேயிருந்துவருகின்றனர்.

இதேவேளை இணக்க அரசியலில் மும்முரமாக இருக்கும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மனித உரிமைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாராளுமன்றிலும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.