கனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு அனுப்பி வைத்த வீடியோப் பதிவு ஒன்றை இங்கே பார்க்கலாம்;

அபி குகதாசனின் அமெரிக்க தேர்தல் குறித்த ஒளிபரப்புக்கள் கனடாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதன் மூலம் கனடிய ஊடகப் பரப்பில் அதிகளவுக்குப் பேசப்படும் ஒருவராகியுள்ளார் அபி.

சில வருடங்களுக்கு முன்னர் இருதய நோயின் தாக்கத்தால் மரணத்தை தழுவிய பூநகரான் குகதாசன் அவர்களது புதல்வி அபி குகதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. குகதாசனும் ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக எதிவருபவர். கனடா உதயன், கொழும்பு தினக்குரல் பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக எழுதிவந்த அவர், ஒரு தீவிரமான சமூக செயற்பாட்டாளருமாவார்.