September 11, 2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்கள் நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று  கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் மற்றும் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் ஆகியவையே 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் நாளை விடுவிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்தக் கிராமங்களில் கோவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டன. அதனால் அந்தக் கிராமங்களில் கோவிட் – 19 நோயாளிகளுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டதுடன் அந்தப் பகுதிகள் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மூன்று கிராமங்களிலும் தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில் நாளை (நவ.11) புதன்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.