September 9, 2024

வெளிநாட்டில் பிச்சை எடுத்து வந்த பெண்ணிண் வங்கிக் கணக்கில் இருந்த தொகை!

எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

எகிப்தில் இருக்கும் பல மாகாணங்களில் பிச்சையெடுக்கும் 57 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சக்கர நாற்காலியை பயன்படுத்தி பிச்சை எடுத்து வந்துள்ளார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து பிச்சை எடுக்கும் போது, உடல் முடக்கம் இருப்பதாக கூறி பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், விசாரணையில் அவரின் இரண்டு வங்கி கணக்குகளை சேர்த்து சுமார் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருப்பதுடன், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விசாரணையில் இதை கேட்டு அதிர்ந்து போன பொலிசார், அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் Nafisa எனவும், அவர் எந்த ஒரு நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,