September 11, 2024

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது!

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலை அருகில் நிறைவடைந்தது.

ஏ.டி.எஸ்.பி-க்கள் முத்துக்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.