Mai 2, 2024

வெள்ளியுடன் கோத்தா ராஜனாமா?

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகவேண்டுமென சில தரப்புக்களும் கோத்தபாய விலகவேண்டுமென மற்றும் சில தரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளதுன.

மகிந்த 19வது திருத்தத்திற்காக தீவிரமாக குரல்கொடுக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கயிறு இழுப்பு போட்டி ஆரம்பமாகியுள்ளது 

நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களை பறிக்கும் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் 19வது திருத்தத்திற்காக பிரதமர் குரல்கொடுக்க தொடங்கியுள்ளார்.

பலவாரங்களாக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது,அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது 11 கட்சி கூட்டணியுடன் இணைந்து சுயாதீனமாக செயற்பட்டுவருவதுடன் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்,

அதேவேளை ஏனைய சிலர் பதவி விலகல் இடம்பெறவேண்டும் என்றால ஜனாதிபதியே பதவி விலகவேண்டும் என தெரிவித்துவருகின்றனர்.

சில சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,ஆனால் ஜனாதிபதி இளையவர்களையே நியமிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இளையவர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் என ஜனாதிபதி கருதுகின்றார்.

தற்போது சில மாற்றங்களுடன் பிரதமர் 19 வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

19வது திருத்தத்தை ஆதரிப்பதற்கு தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளதுடன் இரண்டுநாள் விவாதத்தை கோரியுள்ளார்.

இந்த யோசனைகளை ஆராய்வதற்காக கட்சி தலைவர்கள் இன்றும் நாளையும் சந்திக்கவுள்ளனர், ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற யோசனை குறித்து கருத்தொருமைப்பாட்டை எட்டும் முயற்சிகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பது குறித்து கருத்தொருமைப்பாடு எட்டப்பட்டால்  வெள்ளிக்கிழமைக்குள் இது குறித்து சபாநாயகரிடம் அறிவிக்கப்படும், அவர் அதனை ஜனாதிபதிக்கு அறிவிப்பார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert