Mai 3, 2024

சுமாவின் செல்பி அணி புறப்பட்டது போராட்ட களத்திற்கு?

கொழும்பு  போராட்டத்திற்கு ஆதரவாக சுமந்திரன் திறந்த போராட்டகளம் இனஅழிப்பிற்கு நீதி கோருவதாக மாறியுள்ளது.

முடிவை அவரது மகன் மருமகள் என வருகை தந்து கூட ஜம்பதினை தாண்டியிராத நிலையில் இன்றைய போராட்டத்திற்கு ஆட்கள் வலிந்து அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இன்றும் இரட்டை இலக்க ஆதரவாளர்கள் திரண்டிராத நிலையில் வெற்றி போராட்டமாக ஊதிப்பெருப்பிக்க ஆதரவு சமூக ஊடக தரப்புக்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளன.

அவை காலிமுகத்திடலில் மக்கள் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றது,

யாழ் பண்ணைக் கடற்கரையில் அமைதியாக தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert