Mai 5, 2024

கோத்தா,மகிந்த நடிகர்கள்:கூட்டமைப்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையே சந்திக்க விரும்பாத நிலையில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் இருக்கையில்;, அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.யாழ்ப்பாணம் மட்டுவிலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பொலிசாரால் தாக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரைச் சந்தித்து தங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக்காட்ட முற்பட்ட போது பொலிசார் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டார்கள், தாக்கினார்கள் இது மிகவும் மன வேதனையான விடயம் இப்படியான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உள்நாட்டுப்; பொறிமுறை மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவது மிகவும் அறிவீனமான ஒரு செயலாகத் தான் இருக்கும். அந்த உறவுகளையே சந்திக்க விரும்பாத ஜனாதிபதி பிரதமர் இருக்கையில் அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நாங்கள் நினைப்போமாக இருந்தால் எம்மைப் போன்று அறிவீனமானவர்கள் இருக்க முடியாது. அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச பொறிமுறை மூலம் தான் நீதி கிடைக்குமே தவிர உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக நீதி கிடைக்காது என்பது தான் நாங்கள் கடந்த காலங்களில கற்றுக் கொண்ட படிப்பினையாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறு பிரதமரைச் சந்திக்க விடாமல் தாக்கியமைக்கான எதிர்ப்பினைத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் வெகுஜன ரீதியான போராட்டத்தைச் செய்வதற்காக விளைந்திருக்;கின்றார்கள். நிச்சயாக அவர்கள் பட்ட அந்த அவஸ்தையை வெளிக்காட்டுவதென்பது மிக முக்கியமான விடயமாகும். அவ்;வாறு அவர்கள் அந்த ஆர்;ப்பாட்டத்தைச் செய்வதற்கான பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. அதற்கான ஆதரவினை ஒட்டுமொத்த தமிழர்களும் வழங்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளைச் சுட்டிக் காட்டுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கின்றது. அந்த உரிமையின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்; உறவுகளுக்கு எற்பட்ட அந்த அவலத்தை, அராஜகத்தை அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலமமாக வெளிப்படுத்துவதற்கு முனைந்திருக்கின்றார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற இந்த ஆட்சியாளர்களுக்கும், உலகத்திற்கு செய்தியை அவர்கள் சொல்ல வேண்டும். இந்த ஆட்சியாளர்களால் எமது உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாது. சர்வதேச பொறிமுறையின் மூலம் தான் நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் கூட இந்த உள்நாட்டுப் பொறிமுறையைப் பற்றி தெரிந்திருக்கின்றார். அதற்கேற்ற விதத்தில் எங்களது அரசியற் செயற்பாடுகளும் இருக்க வேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert