April 28, 2024

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர்  கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் ஆசிரியை ஒருவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முகா இந்து மகளிர்  கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார்.

இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்க சென்ற நிலையில், பாடசாலை நிர்வாகத்துக்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் தன்னை தாக்கியதாகவும்,  அபாயா அணிந்து வந்த ஆசிரியையும், அதிபரும்,   திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்கென சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மாணவிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert