April 27, 2024

பிரிட்டனின் ஆயுதப்பயிற்சி இலங்கை காவல்துறைக்கு!

பிரிட்டன் மீண்டும்  இலங்கை பொலிஸாரிற்கு பயிற்சிகளை வழங்கலாம் என சண்டே போஸ்ட் தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்தியுள்ள போதிலும் பிரிட்டன் தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கலாம்.

இலங்கை பொலிஸாரினால்கைதுசெய்து வைக்கப்பட்டிருந்தவேளை பாலியல்வன்முறைகள்  மின்சாரசித்திரவதைகள் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இலங்கையிலிருந்து தப்பி ஸ்கொட்லாந்து வந்த பின்னர் தங்கள் அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை நிறுத்தவேண்டும் எனவேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தங்களின் நீண்ட கால பயிற்சி இலங்கைபொலிஸார் நடந்துகொள்ளும்விதத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துவந்த ஸ்கொட்லாந்து பொலிஸ் கடந்த மாதம்இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் கைவிட்டுள்ளது.

எனினும் பிரிட்டன் தான்  இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸார் தங்கள் பயி;ற்சிகளை நிறுத்திக்கொண்டதன் அர்த்தம் இலங்கை பொலிஸாருக்கு  இங்கிலாந்தின் நிதியுதவியுடனான திட்டம் எதுவும் எதிர்காலத்தில் இருக்காது என்பதல்ல என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தின் கடிதம் தெரிவித்துள்ளது.

எந்த எதிர்கால திட்டத்திற்குமான தனது அணுகுமுறை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது தற்போதைய மறுஆய்வின் போது பல காரணிகளை கருத்தில் கொள்வோம் என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து இலங்கைஅரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது என சண்டே போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  சர்வதேச உண்மைமற்றும் நீதிதிட்டத்தின் பிரான்சிஸ்ஹரிசன் இந்த செய்தி மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தனது உடன்படிக்கையை தொடரப்போவதில்லை என ஸ்கொட்லாந்து அறிவித்தவேளை அது வலுவானசெய்தியைதெரிவித்ததுடன் ஐக்கிய இராச்சியம் இலங்கையில் இடம்பெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கின்றது என்ற செய்தியையும் தெரிவித்தது என பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது கதவுகளை மீண்டும் திறந்துள்ளது என  அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினர் மேர்சிடெஸ் விலால்பா பிரிட்டனின்இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

பிரிட்டனின் முந்தைய உதவி இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் பெருந்தொற்றின் போது அதிகரித்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை படையினருக்கு மேலும்பயிற்சிகளை வழங்குவது குறித்து பிரிட்டன் சிந்திப்பது மன்னிக்க முடியாததது என அவர் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனதெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் நிழல் சமூக அமைச்சர் மிலெஸ் பிரிக்ஸ் இது குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி வெளிவிவகார அமைச்சிற்கு எழுதவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert