Mai 6, 2024

வருகின்றது மீண்டும் சீனக்கழிவு!

இலங்கையில் சிறு போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதன உரத்தை சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சீன நிறுவனத்திடம் இருந்து புதிதாக எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உரத் தொகையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சேதன உரத்துக்கு பணத்தைச் செலுத்தி சமரசம் செய்துகொள்ளும் உடன்பாட்டுக்கு அமைய சீன நிறுவனத்துக்கு 6.2 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் உரத் தொகை கிடைத்த பின்னர் மீதமுள்ள தொகையைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட வணிக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் உரத் தொகையின் மாதிரிகளை தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மூலம் சீன நிறுவனத்தின் சார்பிலும் சுயாதீனமாகவும் பரிசோத னைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் சீன உரக் கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர், அதிலுள்ள உரத் தொகையை தேசிய உரச் செயலகம் மற்றும் தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வு கூடங்களிலும் பரிசோதிக்கப்படவுள்ளதெனவும் தலைவர்  தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert