April 28, 2024

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022. பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை குடும்பப் பொங்கலாக ஒன்றுகூடிக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே பொங்குவதற்கான அத்தனை பொருட்களும் வழங்கப்பட்டு குடும்பத்தினருடன் பொங்கி மகிழ சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்படுவரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த வரலாற்று மரபுத் தொடர்ச்சியை பேணிப்பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டியது தலையாய கடமையும் அவசியமுமாகும். அந்த வகையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா புதுப்பொலிவு பெறுகின்றது. தமிழர் அடையாளம் மீண்டுமொருமுறை இந்தப் புதிய ஆண்டில் தடம் பதித்துக் கொள்கின்றது. தைப்பொங்கல் நன்நாளாம் தமிழர் பண்பாட்டுத் திருநாளில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களும்,உணர்வுகளும் புது மேன்மைபெற்று. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ‘பொங்கலோ பொங்கல்’ இடம்: உலகத்தமிழர் வரலாற்று மையம். ஒக்ஸ்போர்ட் பிரித்தானியா OX173NX நேரம்:12:00 நாள் 16/01/2022

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert