கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?


மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள்

தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது !

கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில் சுமந்து கல்லறை வாழும் தெய்வங்கள் நினைவு எம் உள் என்றும் மாறாது !

சொல்பவன் சொல்லட்டும் ,செயலற்றவன் புலம்பட்டும், எம் மன்னர்கள் செய்த தியாகத்தை மனம் சுமந்த எமக்கு தடைபோட யாரிங்கே ?

உன்னை உன் செயலை மாற்றும் நாள் இது,இணைவது மனங்கள் மட்டுமல்ல தாயக வேட்கையும் !

வேட்கையில் எழும் ‌செயலை வெட்டிட நீங்கள் யார் ?

நீங்கள் உங்கள் செயலை நினைத்து வெட்கப்படும் நாள் வெகுதுாரம் இல்லை!

எழுவோம் சரித்திரம் படைப்போம் என்று எதிரியின் பாசறை சென்றவர்கள் முன்
எது பேசுகிறோம் என்று தெரியாதவர்கள் இனியேனும்

கார்த்திகை நாயகர்கள் கல்லறைமுன் சத்தியம் எடுத்து தேசத்தின் விடிவுக்காய் பயணிக்கட்டும் !

You may have missed