Mai 10, 2024

நிரூபமாவுக்கு நாமலுக்கு என்ன தொடர்பு? அவரே பகிரங்கமாக கூறிய பதில்

 

எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்தார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், நிரூபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksha) எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை.

அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார். அதனால் உறவு வேறு அரசியல் வேறு.

அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நாம்மால் என்ன செய்ய முடியும்.

1990 – 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா மெடம் ஆகியோரிடம் கேட்க வேண்டும் என்றும் நாமல் குறிப்பிட்டார்,