Mai 10, 2024

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்பு! உள்ளிருப்புக்குத் தயாராகும் பிரான்ஸ்?

பிரான்ஸில் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் ஏனைய எட்டு மாநகரங்களிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்குக் கண்காணிக்கப்பட்டு அதன் நோக்கம் வெற்றியளிக்காதுவிடின் குறிப்பிட்ட நகரிங்களில் உள்ளிருப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
அதாவது இப் பகுதிகளில் இவ் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் கொரோனாத் தொற்றுக் குறையாது விடின் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள இக் கால கட்டத்தில் இரவு நடமாட்டம் முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நேரங்களில் வெளியே சென்று வருவோரை விட, கட்டுப்பாட்டை மீறுவோர்கள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுத் தண்டம் விதிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனாத் தொற்றினைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகப் பிரான்ஸில் கொரோனாத் தொற்று நாள் தோறும் அதிகரிப்பதுடன், உயிரிழப்புக்களும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் கொரோனாத் தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றது.
இந் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்குக் குறைவடைய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை என்றால் குறிப்பாக பாரிஸ், பாரிஸ் புறநகர்ப் பகுதி உள்ளிருப்பு நடவடிக்கைக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பகுதி பகுதியாக உள்ளிருப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு சுகாதார ஆலோசனை மையம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார ஆலோசனை மையம் ஜனாதிபதி மக்ரோன் அவர்களால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்