Mai 10, 2024

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் – எல். முருகன்

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமி 2021 சட்டப் பேரவை தேர்தலில் களம் காண உள்ளார். இதனால் 2021 ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக  பாஜக  தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது அதிமுக – பாஜக கூட்டணி தான். 2016 ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது என்று கூறினார்.

இதனிடையே பாஜக  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது அறிவிக்க வேண்டிய தேவையில்லை. தேர்தல் நேரத்தில் தான் அதிமுக – பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். இருந்தாலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது என்று கூறியது கவனிக்கத்தக்கது.