Mai 10, 2024

கடலட்டை பிடிப்பு விவகாரம்:இப்போது கொரேர்னாவாம்?

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து கடலட்டை பிடித்து குடைச்சல் கொடுத்து வரும் தெற்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து கொரோனா கொண்டுவர தொடங்கியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அவர்கள் இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோளர்ப்படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன், இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.