Mai 11, 2024

மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது

சர்வதேச முதியோர்தினத்தை முன்னிட்டு சிறுப்பிட்டி கிழக்கு J/271 மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் திரு சு கனகராஜா ஆசிரியர் தலமையில் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.விஜிதா பிரதீபன் (சிறுப்பிட்டி இலங்கை வங்கி முகாமையாளர்)அவர்கள் கலந்து சிறப்பித்தர் இந்நிகழ்விற்கான நிதியினை வழங்கிய V.Vஇராஜரத்தினம் அவர்களுக்கும். இரவுப்போசனத்திற்கான நிதியினை வழங்கிய பா.நிசாந்தன்(தம்பி) அவர்களுக்கும், இந்நிகழ்வினை சிறப்பாக நிகழ உதவிய சிறுப்பிட்டி வாழ் இளைஞர்களுக்கும், வரவேற்பு நடனத்தை வழங்கிய பாடசாலையின் பழைய மாணவிக்கும் சிறுப்பிட்டி மூத்த பிரைஜைகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.