April 27, 2024

எங்கள் தாயகத்தில் வெடுக்குநாறி மலை எங்குள்ளுது….?

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது .
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றது .
300 m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றை காண முடியும் .
மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர்ர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது . கிட்டத்தட்ட 5 தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர் .
2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது .
ஆனாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து இத்தடையினை நெடுங்கேணி காவல் துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
விதிக்கப்பட்ட தடையானது நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் நீக்கப்பட்டதை அடுத்து நேரில் சென்று பார்வையிடுவதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் எங்களிற்கு சந்தர்ப்பம் கிடைத்தது .
அங்கு , பிராமிய கலவெட்டுக்கள் , வட்டெழுத்துக்கள் ,, மர்மக்கேணி , இராஜ நாக குகை , மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆகியவற்றை பார்க்கமுடியும்
.