März 18, 2024

பின்லாந்துக்கு எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

பின்லாந்துக்கான எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது என பின்னலாந்துக்கு எரிவாயு வழங்கும் நிறுவனமான காஸ்கிரிட்  உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து பின்லாந்தில் உள்ள இமாத்ரா என்ற இடத்திற்கு எரிவாயுவை ரஷ்யா அனுப்புகிறது.

எரிவாயுவுக்கு ரூபிளில் பணம் செலுத்தத் தவறியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என ரஷ்ய எரிபொருள் வழங்கும் நிறுவனமான காஸ்போறம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் வாங்கும் எரிபொருளுக்கு பதிலாக எஸ்டோனியாவிலிருந்து கட்டம் கட்டமாக எரிபொருளை பெற ஏற்பாடு செய்யப்படுவதாக காஸ்கிரிட்  கூறியுள்ளது.

பின்லாந்து நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேநேரம் பின்லாந்து எல்லைகளை அண்டி ரஷ்யப் பிரதேசதிற்கு 12 இராணுவ தளங்களை இவ்வருட இறுதிக்கும் அமைக்கவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் படை அதிகாரிகளிடம் கூறியிருந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert