April 30, 2024

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை – ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது 

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்தமை குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert