September 11, 2024

கடவுள் கணக்குத் தீர்க்கும் நேரம்!

அன்று நந்திக் கடல்
இன்று காலிமுகத் திடல்

„அரசன் அன்றே கொல்வான்.
தெய்வம் நின்றே கொல்லும்.“
எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம்
மீறப்படும் பொழுது
அங்கு மக்களால் போராட்டம்
மேற்கொள்வது வழமையானது.

மனித உயிர்களின்
மதிப்புத் தெரியாத
ராஜபக்ஷக்களுக்கு
இந்த இலங்கைத் தீவிலே
அடக்கு முறைக்கு எதிராகக்
குரல் கொடுத்த
சிறுபான்மைத் தமிழ் மக்களைத்
தீவிரவாதிகள் என
முத்திரை குத்தியது
மட்டுமல்லாமல்
இனவாதத்தைத்
தூண்டி விடுவதில்
தனித் திறமை கொண்டவர்கள்
இந்த ராஜபக்ஷக்கள்
என்றால் அது மிகையாகாது.!

அன்று ஆட்சியைப்
பிடிப்பதற்குச் சிறுபான்மை
தமிழ் பேசும் மக்களுக்கு
பல அடாவடித்தனமான
அடக்கு முறைகளையும்,
அழித்தொழிப்புகளையும்,
வன்முறைகளையும்,
அட்டூழியங்களையும் செய்தார்கள்-அதில்
சிலவற்றை இன்று ஆட்சி, அதிகாரம்
பறிபோகும் நிலைமை கண்டு பயந்து
தமக்கு அதிகாரம் தந்த
தம் இன மக்கள் என்றும் பாராமல்
பழக்கதோசம் வழமையைக் காட்டியது.

பல இறந்த இன்னுயிர்களின்
சாபமும், இறைவனின் கோபமும் தாம்
என்ன செய்வது என்பதே தெரியாமல்
ராஜபக்ஷக்களை ஆட்டிப் படைக்கின்றது.

„நல்லதை நினைத்தால்
நல்லதே நடக்கும்
என்று“ சும்மாவா சொன்னார்கள்???
இனி இவர்களைக்
கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
கெட்டவர்களுக்குக் கடவுள் நல்லா
அள்ளிக் கொடுப்பார் ஆனால் கைவிட்டு
விடுவார். என்பது இவர்கள் உதாரணம் !

தமிழரசி ஜெயதாசன் (லண்டன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert