Mai 6, 2024

பொதுஜனபெரமுன பங்காளிகள் புதிய கூட்டணி!

இலங்கையின் அனைத்து முக்கிய கட்சிகளும் சிதைவடையாமல் இருப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன மார்ச் ஆரம்பத்தில்புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பல கட்சிகளில் பிளவுகள் ஏற்படலாம் .இலங்கையின் அனைத்து முக்கிய கட்சிகளும் சிதைவடையாமல் இருப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன மார்ச் ஆரம்பத்தில்புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பல கட்சிகளில் பிளவுகள் ஏற்படலாம் என கொழும்பு ஊடகமொன்றுதெரிவித்துள்ளது.

12 அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு மார்ச் ஆரம்பத்தில் வெளியாகும் தற்போது அரசாங்கத்தில் இணைந்துள்ள கட்சிகளே புதிய கூட்டணியாக உருவெடுக்கவுள்ளன எனினும் அவை தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து செயற்படும் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமல்வீரவன்ச,உதயகம்மன்பில வாசுதேவநாணயக்கார போன்றவர்களின் கட்சிகளும் இடம்பெற்றிருக்கும் – இது குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம்.

கடந்தவாரம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாநாட்டில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள்; காணப்படாததை தொடர்ந்து பொதுஜனபெரமுனவில் பிளவு என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்து கரிசனையும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் தனியான கூட்டணியின் கீழ் செயற்படுவார்கள் ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குமார் வெல்கம ஆகியோர் புதிய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் பிரதி தலைவர் பதவியை வழங்குமாறு சம்பிக்கரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் சஜித் பிரேமதாச அதற்கு இன்னமும் பதில் வழங்கவில்லை எனவும் தெரியவருவதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தினை கடந்காலங்களில் மறைக்காத சம்பிக்கரணவக்க பொது கூட்டமைப்பினை உருவாக்குவது குறித்து ரணில்விக்கிரமசிங்க,குமார் வெல்கமவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்,பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் வட்;டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் இடம்பெற்றுள்ள சிறுபான்மை கட்சிகளும் கட்சியின் தலைமையின் செயற்பாடுகள் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளன,ஐக்கிய தேசிய கட்சி பரந்துபட்ட கூட்டணியாக மாற்றப்படும் ஒரு கட்சியாக செயற்படாது சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அதிகளவு அங்கீகாரம் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டபோதிலும் இந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என அந்த கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கூட்டணி உருவாக்கத்திற்காக காத்திருக்கின்றனர்.

மூன்றாவது கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தொடர்பிலானது அந்த கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு கண்வைத்துள்ள அவர் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

12 அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு மார்ச் ஆரம்பத்தில் வெளியாகும் தற்போது அரசாங்கத்தில் இணைந்துள்ள கட்சிகளே புதிய கூட்டணியாக உருவெடுக்கவுள்ளன எனினும் அவை தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து செயற்படும் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமல்வீரவன்ச,உதயகம்மன்பில வாசுதேவநாணயக்கார போன்றவர்களின் கட்சிகளும் இடம்பெற்றிருக்கும் – இது குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம்.

கடந்தவாரம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாநாட்டில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள்; காணப்படாதiதை தொடர்ந்து பொதுஜனபெரமுனவில் பிளவு என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்து கரிசனையும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் தனியான கூட்டணியின் கீழ் செயற்படுவார்கள் ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குமார் வெல்கம ஆகியோர் புதிய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் பிரதி தலைவர் பதவியை வழங்குமாறு சம்பிக்கரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் சஜித் பிரேமதாச அதற்கு இன்னமும் பதில் வழங்கவில்லை எனவும் தெரியவருவதாக டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தினை கடந்காலங்களில் மறைக்காத சம்பிக்கரணவக்க பொது கூட்டமைப்பினை உருவாக்குவது குறித்து ரணில்விக்கிரமசிங்க குமார் வெல்கமவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்,பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் இடம்பெற்றுள்ள சிறுபான்மை கட்சிகளும் கட்சியின் தலைமையின் செயற்பாடுகள் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளன,ஐக்கியதேசிய கட்சி பரந்துபட்ட கூட்டணியாக மாற்றப்படும் ஒரு கட்சியாக செயற்படாது சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அதிகளவு அங்கீகாரம் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டபோதிலும் இந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என அந்த கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கூட்டணி உருவாக்கத்திற்காக காத்திருக்கின்றனர்.

மூன்றாவது கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தொடர்பிலானது அந்த கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு கண்வைத்துள்ள அவர் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert