Mai 6, 2024

இலங்கையில் மரணத்தின் பின்னர் சோதனையில்லை!

வடக்கில் வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் 07 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில்,யாழ்.போதனா வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஒருவர்,கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (ஒருவர் கொரோனா விடுதியிலும், மற்றயவர் விடுதி இலக்கம் 01 இலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்)

இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 07 பேர் PassPort இற்காக பரிசோதனை மேற்கொண்டவர்கள் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிரிழந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குப்பிளான் கிராமத்தினைச் சேர்ந்த பெண் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் போது பிசிஆர் கட்டாயமில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆலோசகரான வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை பிசிஆர் செய்வதன் விளைவாக இறந்தவர்களின் உறவினர்கள் எதிர்கொண்ட சிரமங்களைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 15ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி நேற்று முதல் அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனையின் போது பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக் கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் பிரேதப் பரிசோதனையின் போது பிசிஆர் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert