April 27, 2024

டோட்முண்ட் நகரில் அமைய இருக்கும் திருவள்ளுவர் சிலை பற்றிய கலந்துரையாடல் அனைவரும் வருக 20.02.2022, ஞாயிற்றுக்கிழமை அன்று

DORTMUND, GERMANY - JULY 04, 2018: U-Tower or Dortmunder U was brewery building, now center of arts and creativity Museum Ostwall in Dortmund, Germany

DORTMUND, GERMANY – JULY 04, 2018: U-Tower or Dortmunder U was brewery building, now center of arts and creativity Museum Ostwall in Dortmund, Germany

டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Rheinische Str பகுதியில் திருவள்ளுவர் சிலை ஒன்றை அமைப்பதற்கு டோட்முண்ட் நகரசபை அனுமதி வழங்கியுள்ளது. ‚தமிழர் அரங்கம்‘ கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

சிலையின் தோற்றம் பற்றிய விபரங்களை விரைவில் அறிவிக்கும்படி நகரசபை எம்மைக் கோரியிருக்கிறது. இது தொடர்பாக யேர்மனியில் செயற்படும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் மேலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள நாம் விரும்புகிறோம்.

வரும் 20.02.2022, ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளுவர் சிலை பற்றிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்த உள்ளோம். தாங்களும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றி தங்களின் கருத்துக்களை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடம்: தமிழர் அரங்கம்,
காலம். 20.02.2022, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert