April 26, 2024

கொரோனா பரவலை தொடர்ந்து பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.

பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.20/1/22கொரோனா பரவல தொடர்ந்து இருப்பினும்.தளர்த்தபடும் கட்டுபாடுகள்..பிரதமர் – சுகாதார அமைச்சரின் ஊடக சந்திப்பு!இன்று வியாழக்கிழமை காலை சுகாதார பாதுகாப்பு சபை ஜனாதிபதி மக்ரோன் தலைமையில் இடம்பெற்றது. * பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையிலும், கட்டுப்பாடுகளை பகுதி பகுதியாக தளர்த்த இந்த சுகாதார பாதுகாப்பு சபையில் தீர்மானிக்கப்பட்டது. * மாலை 7 மணிக்கு பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Véran இணைந்து ஊடக சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.ஊடக சந்திப்பினை நேரலையாக இந்த இணைப்பில் படிக்கலாம். (இப்பக்கத்தினை Refresh செய்யவும்) ****** திங்கள் முதல் தடுப்பூசி அட்டை!வரும் திங்கட்கிழமை முதல் (ஜனவரி 24) தடுப்பூசி அட்டை (pass vaccinal) நடைமுறைக்கு வருகின்றதாக பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.கடந்த ஒருவாரமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றதாக பிரதமர் அறிவித்துள்ளார்.12-17 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி!12 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடும் பணி வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல் ஆரம்பமாகும் என பிரமர் அறிவித்துள்ளார்.மருத்துவமனையில் நெருக்கடி!இந்த ஐந்தாம் கொரோனா தொற்று அலையில்.. மருத்துவமனைகள் தொடர்ந்தும் நெருக்கடியிலேயே உள்ளன. இந்த விதிவிலக்கான தொற்று அலை இன்னும் முடியவில்லை. ஆனால் ஓரளவுக்கு வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது எனவும் பிரதமர் Jean Castex தெரிவித்தார்.ஒரு வாரத்தில் 12 மில்லியன் பரிசோதனைகள்!கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரான்சில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை இதுவாகும். முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தடுப்பூசி அட்டை!இதுவரை தடுப்பூசி எதுவும் போடாதவர்கள், பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தங்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டால் அவர்களும் தடுப்பூசி அட்டையை (pass vaccinal) பயன்படுத்த முடியும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.இரவு விடுதி திறப்பு!இரவு விடுதிகள் வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அன்றைய திகதியில் இருந்து மதுச்சாலைகளிலும், அருந்தகங்களிலும் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டு அருந்த அனுமதிக்கப்படுகின்றது.முகக்கவசங்கள்!பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் எனும் நடைமுறையில் உள்ள சட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதியுடன் தளர்த்தப்படுகின்றது.முடிவுக்கு வரும் ‘கட்டாய Télétravail’ !பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டும் எனும் கட்டாயம் தளர்த்தப்படுகின்றதாகவும் பிரதமர் அறிவித்தார். வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயமாக வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டும் என ஜனவரி 3 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டாயம் பெப்ரவரி 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.இரவு விடுதிக்கு செல்ல PCR முடிவு தேவையில்லை!தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்கள் PCR அறிக்கைகள் எதுவும் இல்லாமல் பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் இரவு விடுதிகள், டிஸ்கொதே திறக்கப்படும் போது, செல்லமுடியும் என சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவித்துள்ளார்.தளர்த்தப்படும் தடுப்பூசி அட்டை!வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி அட்டைகள், கொரோனா பரவல் குறைவடைந்திருக்கும் போது தளர்த்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்திருக்கும் காலத்தில் தடுப்பூசி அட்டை இல்லாமல் எங்கும் பயணிக்க முடியும் என பிரதமர் அறிவித்தார்.********பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஊடக சந்திப்பு நிறைவுற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert