வடக்கில் மேலும் இரண்டு?

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த அவரை சுகாதாரத் துறையினர் சுயதனிமைப்படுத்தலில் வைத்துக் கண்காணித்தனர். அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் குடிதண்ணீர் போத்தல் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் வாகனச் சாரதிக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மேல் மாகாணத்துக்கு சென்று திரும்பிய நிலையில் கரைச்சியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.