Oktober 8, 2024

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  27.11.2020 இன்று மாலை 6.07 மணி அளவில் தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாவீரநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் அய்யா பெ. மணியரசன் அவர்கள் மாவீரர் சுடர் ஏற்றி மாவீர நாள் உரை நிகழ்த்தினார். உணர்வாளர் திரளாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

அதேபோல் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  சென்னையில்  கவிஞர் கவிபாஸ்கர், கவிஞர் முழுநிலவன், தோழர்கள் வெற்றித்தமிழன், கோவேந்தன், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும்,  தஞ்சாவூர், செங்கிப்பட்டி, கும்பகோணம், சாமிமலை, ஓசூர், திருச்சி,  கடலூர், மதுரை, தர்மபுரி, புதுச்சேரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், சிதம்பரம், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட இடங்களில் மாவீரநாள் நிகழ்வு நடைந்தேறியது.