September 10, 2024

கரவெட்டியும் தப்பி பிழைத்தது?

கூட்டமைப்பு வசமுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) யின் பாதீடு இரண்டு வாக்குகளால் தப்பி பிழைத்துள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீடு இன்று (27) முற்பகல் 10 மணிக்கு பிரதேச சபை மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரனினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில் 31 உறுப்பினர்களில் ஆதரவாக 16 வாக்குகளும்,  எதிராக 14 வாக்குகளும் ஒருவர் சபைக்கு வருகை தராமலும் பாதீடு நிறைவேற்றம் பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 3 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி இரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை சிறீPலங்கா சுதந்திர கட்சி 7உறுப்பினர்களும், அகில இலங்கை காங்கிரஸ் 7உறுப்பினர்களுமாக 14பேர்; எதிராகவும் வாக்களித்துள்ளனர்.