ஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு?

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை கொலை செய்ய சதி திட்டம்  வகுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.