September 16, 2024

மீண்டும் ஊடகவியலாளர் கைது வேட்டை?

கொழும்பில் சிங்கள மொழி தொலைக்காட்சியின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை திரும்பியவுடன் உடனடியாக கைது செய்யப்படுவார் என பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் இவர் அதிகாரிகள் தவறால் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் மரணமடைந்து வீதியில் விழுந்து கிடக்கின்றனர் என போலி தகவல்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தனது கணவருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இவருடன் மற்றொருவர் ஜப்பானைச் சேர்ந்தவர் எனவும் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இவரும் இலங்கைக்கு திரும்பியதும் அவரை கைது செய்வோம், ‚என்று ரோஹண கூறியுள்ளார்.