September 11, 2024

ரஷ்யாவில் யெகோவா சாட்சியங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக் கைது!

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சியங்கள் என்ற மத அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாக சோதனை செய்து குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.பாலாக்லாவாஸ் என்ற இடத்தில் ஆண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டுத் தொடரில் கதவையுடைத்து அங்கிருந்தவர்களை ரஷ்யக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு நாயணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் காணொளியையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

2019 ஆண்டு யூன் மாதம் முதல் மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடித் தொடர்களில் சதிக்கூட்டங்கள் இடம்பெற்தாக நம்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு யெகோவாவின் சாட்சியங்கள் என்ற அமைப்பை தீவிரவாதிகள் என்று தடை செய்தது.

தடைசெய்யப்பட்ட மத இயக்கத்தில் தலைநகர் மாஸ்கோ மற்றும் ஏனைய பிராந்திய ரீதியாக போதனைகளைப் பரப்புதல், புதிய உறுப்பினர்களை இணைத்தல், பயிற்றுவித்தல் போன்ற செயற்பாடுகளைச் செய்வதாக கூறப்படுகிறது.

யூலை மாதம், யெகோவாவின் சாட்சிகள் மீது ரஷ்யாவின் ஒடுக்குமுறை குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கவலை தெரிவித்தது. 175,000 ரஷ்ய குடிமக்களின் அமைதியான வழிபாட்டை அரசு குற்றவாளியாக்கியது மற்றும் ரஷ்ய அரசியலமைப்பில் பொதிந்துள்ள மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறியது என குற்றம் சாட்டியுள்ளது.

இதேநேரம் யெகோவாவின் சாட்சியங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சித்திரவதை மற்றும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என  டிசம்பர் 2018 அந்த நிர்வாகம் கூறியுள்ளது.

யெகோவாவின் தடையை ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்  வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

யெகோவாவின் சாட்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. கிறிஸ்தவ கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள். அவர்கள் தங்களை சமாதானவாதிகளாக நம்புகிறார்கள். இரத்த மாற்றத்தை அவர்கள் எதிர்கிறார்கள்.