தென்னிலங்கையிலிருந்து யாழ்வருகை தந்தவர் மரணம்?

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த கடையில் பணியாற்றுவதற்காக வருகை தந்ததாகவும் இறந்தவருக்கு41வயசு எனவும் அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கப்படுகின்றது

எனினும் அவருடைய இறப்பிற்கு காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை எ இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது குறித்த கடை பகுதியில்போலீசார் பாதுகாப்பு கடமை ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் கடையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் வெளியே வராதவாறு தடுக்கப்பட்டுள்ளார்கள்.