Oktober 7, 2024

கொரோனா வைரஸால் அகமது படேல் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அகமது படேல் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவிலிருந்து அவர் முழுவதும் மீண்டு வராத நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறியிருந்தது.  இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அகமது படேல் காலமானதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் பைஷல் படேல் தனது ருவிட்டரில் தெரிவிக்கையில், “கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது தந்தை அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.   அவரது உள்ளுறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது” எனப் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.