பீதியில் இலங்கை பாதுகாப்பு தரப்பு?

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை முப்படைகள் முதல் காவல்துறை ஈறாக ஆட்டிப்படைத்துவருகின்றது.

மாவீரர் துயிலுமில்லங்கள் சந்திகள் மற்றும் முன்னைய நினைவு தூபிகள் எங்கும் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீதி சோதனைகள்,வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நெல்லியடி நகரப்பகுதியில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணாரா தலைமையில் பொலிசார் நகரப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாரம் மாவீரர் தினம் ஆனபடியால் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளோம்  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துமுள்ளன.