தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வில் நீங்களும் பங்குபற்றலாம்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான தேர்வு நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று 22.11.2020 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுகிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். இத் தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.காலை 9.00 மணி முதல் மாலை 18.00 மணிவரை இத்திறனறிதலை  அகவை வேறுபாடின்றி அனைவரும் எழுதலாம். இத்திறனறிதலின் முடிவில் உங்கள் மின்னஞ்சலுக்கு சான்றிதழ்கள்  கிடைக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், சான்றிதழ்களில் இடம்பெறும்  பெயர் விபரங்களை சரியான முறையில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி திறனறிதலைத் தொடங்கவும்.