September 9, 2024

கொரோனாவால் மூவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 75 வயதான ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 229 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.