ஊடகங்கள் முன்னால் வர கோத்தாவிற்கு சவால்?

ஊடகங்கள் முன்னால் தோன்றி கேள்விகளிற்கு பதிலளிக்க கோத்தாவிற்கு எதிர்கட்சிகள் சவால் விடுத்துள்ளன.

நாளை நாடாளுமன்றில் விசேட உரையை நிகழ்த்துவதற்குப் பதில் ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டினை நடத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ஹரீன் பெர்னாண்டோ இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளன என்றும் மக்கள் தங்கள் துயரங்களைத் தெரிவிக்க காத்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனாதிபதியாக அவர் இருக்க விரும்பினால் மக்களின் கோரிக்கைகளுக்கு அவர் செவிமடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அனைத்து ஊடகங்களும் கேள்வி கேட்பதற்கான நிலையை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.