September 9, 2024

கொன்றவர்கள் நீங்கள்! எதுக்கு உங்களிடம் அனுமதி? கஜேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள்

முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற முற்பட்டபோது அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று நண்பகல் 12 மணியளவில் கஜேந்திரன் தலைமையில் இளைஞர்கள் இணைந்து துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று கஜேந்திரனிடம் வாக்குமூலம் பெற முற்பட்டிருக்கின்றனர்.

அதன் போது, தன்னால் அந்த இடத்தில் வைத்து வாக்குமூலம் வழங்க முடியாது என்று தெரிவித்த கஜேந்திரன் தன்னை கைது செய்து கொண்டு செல்லுமாறும் பின்னர் வாக்குமூலம் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இதன் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் வாக்குமூலம் பெறவில்லை என்றும் அங்கு சிரமதானம் தொடர்ந்தது என்றும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.