அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் கூறும்பொழுது, முன்னிலை பணியாளர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வினியோகிக்கப்படும் என கூறினார்.

இதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து பிஜர், அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும்.

நம்முடைய முதலீடானது, பிஜர் தடுப்பு மருந்து கட்டணமின்றி இலவசம். ஆகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 5ந்தேதி இறுதியாக பேசிய டிரம்ப், சட்டபூர்வ வாக்குகளை நீங்கள் எண்ணினால் நான் எளிதில் வெற்றி பெறுவேன். சட்டவிரோத வாக்குகளை நீங்கள் எண்ணினால் நம்மிடம் இருந்து அவர்கள் தேர்தல் முடிவுகளை திருட முயற்சித்திடுவார்கள் என கூறினார்.