கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.கடலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்றும், அதற்கு முதல்நாளும் கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்தது

நேற்று நள்ளிரவு முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூரில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. கனமழை காரணமாக நாளை தீபாவளியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்களும், சிறுகடை வியாபாரிகள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

மேலும், கடலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.